Sunday, January 15, 2012

நிலாமுற்றம் - சக்திஜோதி


முற்றம் இல்லாத வீட்டில் ஒருபோதும்
நிலவின் வரவு நிகழ்வதேயில்லை
.
முற்றத்தைத் தேடிச் செல்கிறேன்
வீதிதோறும் அலைகிறேன்
.
சின்ன ஜன்னலின் இடையே
வான்வெளியில் ஒளிரும் நிலவை
எனக்குப் பிடிப்பதேயில்லை
.
வீடுகளின் தாழ்வாரத்தில்
கிணற்றடியில்
நீள் வீதியில்
என
எதன் கட்டுப்பாட்டிலும் இல்லாமல்
ஒளியை பரப்பிக் கொண்டேயிருக்கிறது நிலவு
.
ஒரு முற்றம்
தன்னை நிலவொளியில்
நிரப்பிக் கொள்ளவே விரும்புகிறது
.
நிலவும்
தன் முற்றத்தை தேடிக்கொண்டேயிருக்கிறது
.
முற்றம் அடைய முடியாமல்
நானே முற்றமானேன்
நிலாவும் முற்றமாகி விட
.
நாங்கள் சந்தித்துக் கொண்டோம்

No comments:

Post a Comment